Tuesday, December 11, 2012

நெல்லிக்காய் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி.



TNAU-CBE-3


நெல்லிக்காய் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ‘மதிப்பூட்டப்பட்ட நெல்லிக்காய் பொருட்கள் தயாரிப்பு’ குறித்த பயிற்சி இரண்டு நாட்கள் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை-

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வரும் 12, 13 ம் தேதிகளில் வழங்கப்படும் பயிற்சியில், நெல்லிக் கலவை பானங்கள், சர்கரைப்பாகு, கேண்டி மிட்டாய் மற்றும் துருவல், தயாரித்த பொருட்களை சுகாதார முறையில் அடைத்தல், தொழில் துவங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள், பொருட்களை விற்பனை செய்தல், தொழில் துவங்க வங்கி கடன் வசதி பெறுதல் போன்ற தொழில் சம்பத்திப்பட்ட விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
.,
இத்தொழில் நுட்பத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள், ஆயிரம் ரூபாய் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரை பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள், பயிற்சிக் கட்டணத் தொகையை ‘டிடி’ மூலம் முதன்மை ’ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்’ பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்பல்கலை, கோவை-641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பதிவு செய்து கொள்ள வரும் 12 ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் விபரங்களுக்கு, 0422 6611340,  6611268 என்ற தொலிபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்காய்கள்.


-----------------------------------------------------------------------------------(தொடரும்)

Monday, November 26, 2012

அங்கக வேளாண்மை கருத்தரங்கு.




அங்கக வேளாண்மை கருத்தரங்கு.

மாநில அளவில் அங்கக வேளாண்மை குறித்த கருத்தரங்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மூன்று நாட்கள் நடக்கிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை-

மாநில அளவிலான அங்கக வேளாண்மை குறித்த கருத்தரங்கம் நவ., 27 முதல் 29ம் தேதி வரை பல்கலை  பொன்விழா அரங்கில் நடக்க உள்ளது. பல பகுதிக்களிலிருந்து 250க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.  கருத்தரங்கில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், விபரங்களுக்கு 0422 6611523, 6611245, 22441031 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறைக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------(தொடரும்)

Sunday, November 11, 2012

கோவையில் இலவச வேவைவாய்ப்பு பயிற்சிகள்.





கோவையில் இலவச வேவைவாய்ப்பு பயிற்சிகள்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஆண், பெண்களுகளுக்கு, கோவையில், இலவச  வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், கோவையில் செயல்பட்டு வருகிறது அவினாசிலிங்கம் ஜன சிக்க்ஷன் சன்ஸ்தான். வேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக இந்நிறுவனத்தின், அளிக்கப்படுகின்றன, இதற்கான விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஆண்களுக்கு- பிளம்பர், ஆட்டோ எலக்ட்ரீசியன், மோட்டார் வைண்டிங், பெண்களுக்கு- தையல் கலை , எம்பிராய்டரி, பேஷன் டிசைனிங், ஆரிஎம்பிராய்டரி, மெஷின் எம்பிராய்டரி.

எட்டாம் வகுப்பு வரை படித்த ஆண்களுக்கு, மெஷினிஸ்ட், பிட்டர் டர்னர், ரெப்ரிஜிரேட்டர் மற்றும்  ஏ.சி., பழுது பார்த்தல், , மொபைல்போன் சர்வீஸ் (இரு பாலருக்கும்), பெண்கள்-அழகுக்கலை, பேசியல். பத்தாம் வகுப்பு வரை படித்த ஆண்கள் – எலக்டிரீசியன், சி.என்.சி, லேத் ஆப்பரேட்டர்.  பிளஸ் 2 வரை படித்த ஆண்களுக்கு, டூல் மற்றும் டை தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. வரும் 23ந் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான், அழகேசம் ரோடு, கோவை-641043 என்ற முகவரியிலும் 0422-244 8858 என்ற  தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கோவை அவினாசிலிங்கம் ஜன் சிக்‌ஷன் சன்ஸ்தான் இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.’
-------------------------------------------------------------------------------------(தொடரும்)

Monday, November 5, 2012

சாக்லேட் தயாரித்தல் பயிற்சி.




வேளாண் இன்ஜி., கல்லூரி


சாக்லேட் தயாரித்தல் பயிற்சி, தமிழ் நாடு வேளாண் பல்கலையில், வரும் 6,7 தேதிகளில் நடக்கிறது.

வேளாண் பல்கலை அறிக்கை, கொக்கோ மிட்டாய், பழமிட்டாய், பருப்பு மிட்டாய், தேன் மிட்டாய், சர்கரை மிட்டாய் வகைகள் தயாரிக்கும் முறை குறித்து கற்றுத்தரப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், ஆயிரம் ரூபாய் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரை முன்பதிவு செய்து கொள்ள முடியாதவர்கள், பயிற்சிக் கட்டணத் தொகையை ‘டிடி’ மூலம், முதன்மையர், வேளாண் இன்ஜி., கல்லூரி என்ற பெயரில், கோவையிலுள்ள ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில், பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ் நாடு வேளாண் பல்கலை, கோவை-641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பதிவு செய்து கொள்ள வரும் நவ., 6ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு, 0422 6611340, 6611268 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

--------------------------------------------------------------------------------(தொடரும்)

Saturday, September 1, 2012

தேனிவளர்ப்பு.




தேனி அடுக்கு

தமிழ்நாடு வேளாண்பல்கலையில் தேனிவளர்ப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண்பல்கலையில், தேனிவளர்ப்பு குறித்த, ஒரு நாள் பயிற்சி வரும் 6ம் தேதி அளிக்கப்படுகிறது.

தேனிகூட்டங்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனிகூட்டங்க்களை சேர்த்து வளர்க்கும் முறை,  ராணித்தேனி 
உற்பத்தி முறை, இயற்கை எதிரிகள் நிர்வாகம் உள்ளிட் டபயிற்சிகள், இதில் வழங்கப்படுகின்றன.

பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், செப்., 6ம் தேதி காலை 9..00 மணிக்கு, பல்கலை பூச்சியியல்துறைக்கு வரவேண்டும். பயிற்ற்சியில் கலந்து கொள்வதற்கு, 150 ரூபாய்பயிற்சிக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். காலை 9..00. முதல் மாலை 5.00 மணிவரை, பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் இறுதியில், சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல்துறை, தமிழ்நாடுவேளாண் பலகலை, கோவை-641003 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
தேன் எடுக்கும் கருவி.


------------------------------------------------------------------------------------(தொடரும்)

நன்றி தினமலர்.